உதயநிதி ஸ்டாலினின் 'சைக்கோ' ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகின் இளம் நாயகர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் தற்போது அரசியல் பணிகளுக்கு இடையே மூன்று படங்களில் நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’, கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ‘ஏஞ்சல்’ மற்றும் மகிழ்திருமேனி இயக்கும் ஒரு படம் என பிசியாக உள்ளார்.
இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த த்ரில்லர் படமான ‘சைக்கோ’ திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சைக்கோ’ திரைப்படம் வரும் டிசம்பர்27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமான புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருப்பதோடு இந்த படத்தில் நித்யாமேனன் மற்றும் அதிதிராவ் ஹைதி ஆகிய இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். மிரளவைக்கும் இசைஞானியின் இசையில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு தன்விர்மிர் ஒளிப்பதிவும், அருண்குமார் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். டப்புள்மீனிங் புரடொக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments