உதயநிதியின் 'கலகத்தலைவன்' முதல் நாள் வசூல்: பாக்ஸ் ஆபிஸ் வெற்றிப்படமா?

  • IndiaGlitz, [Saturday,November 19 2022]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவான ‘கலகத்தலைவன்’ திரைப்படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றது என்பதும், கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும் விமர்சகர்களும் இந்த படத்திற்கு நல்ல விமர்சனத்தை கொடுத்ததை அடுத்து நேற்று மாலை மற்றும் இரவு காட்சிகள் திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் ஆனது என்றும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் நேற்றைய முதல் நாளில் இந்த படம் 2 முதல் 3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

பாசிடிவ் விமர்சனம் காரணமாக குடும்ப ஆடியன்ஸ்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருவதாகவும், எனவே இந்த படம் விமர்சனரீதியில் மட்டுமின்றி வசூல் அளவில் நிச்சயம் வெற்றி படம் தான் என்றும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன .

உதயநிதி ஸ்டாலின் நடிப்பு, மகிழ் திருமேனியின் கச்சிதமான திரைக்கதை ஆகியவை படத்தின் பாசிட்டிவ்வாக உள்ளன என்றும் குறிப்பாக பிக்பாஸ் ஆரவ்வின் வில்லத்தன நடிப்பு மிகவும் அபாரம் என்றும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்த படம் விமர்சன அளவிலும் வசூல் அளவிலும் வெற்றிப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

'வாரிசு' படத்திற்கு சிக்கல் வரக்கூடாது, வந்தால்... லிங்குசாமி ஆவேசம்!

விஜய்யின் 'வாரிசு' திரைப்படத்திற்கு சிக்கல் வரக்கூடாது என்றும் அப்படி வந்தால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இதற்கான தீர்வைக் கொண்டு வருவோம் என்றும் எச்சரிக்கை விடும் வகையில் இயக்குநர் லிங்குசாமி

70 வயதில் கபடி களத்தில் இறங்கும் ராஜ்கிரண்: 'பட்டத்து அரசன்' டிரைலர்

70 வயது கபடி வீரராக நடிகர் ராஜ்கிரண் நடித்துள்ள பட்டத்து இளவரசன் என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகிய இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட லைகா: ரசிகர்கள் செம குஷி!

அஜித் படத்தின் முக்கிய அறிவிப்பை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அருண் விஜய் பிறந்த நாளில் வெளியான சூப்பர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்:  இணையத்தில் வைரல்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அருண்விஜய் நடித்து வரும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் சற்று முன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

எனது மகள் சினிமாவில் நடிக்கின்றாரா? நடிகை ரோஜா விளக்கம்

நடிகை ரோஜாவின் மகள் சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த செய்தி குறித்து நடிகை ரோஜா விளக்கமளித்துள்ளார்.