நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டி.. உதயநிதி ஸ்டாலின் செய்த மிகப்பெரிய உதவி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண 120 சிறுவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் சென்று அவர்களுடன் போட்டியை நேரில் பார்த்தார். சிறுவர், சிறுமிகளுக்கு அவர் செய்த இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்த்தார். இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் போராடி தோல்வி அடைந்தது என்பதும் ராஜஸ்தான் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த போட்டியை பார்க்க தனது சேப்பாக்கம் தொகுதியின் 63 வது வார்டில் திறமை மிகுந்த 120 சிறுவர்கள் காணும் வகையில் அவர்களுக்கு டிக்கெட் வாங்கி தந்து அவர்களுடன் அமர்ந்து ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க வேண்டும் என்று பலருக்கு கனவு இருந்தாலும் டிக்கெட் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும் டிக்கெட் விலை மிகவும் அதிகமாகவும் உள்ளது.
ஆனால் தனது தொகுதியைச் சேர்ந்த 120 சிறுவர்களுக்கு தனது செலவில் டிக்கெட் வாங்கி கொடுத்து அவர்களுடன் போட்டியை பார்க்க உதவி செய்த அமைச்சர் உதயநிதியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments