நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டி.. உதயநிதி ஸ்டாலின் செய்த மிகப்பெரிய உதவி..!

  • IndiaGlitz, [Thursday,April 13 2023]

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண 120 சிறுவர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைத்துச் சென்று அவர்களுடன் போட்டியை நேரில் பார்த்தார். சிறுவர், சிறுமிகளுக்கு அவர் செய்த இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நடந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்த்தார். இந்த போட்டியில் சென்னை அணி கடைசி ஓவரில் போராடி தோல்வி அடைந்தது என்பதும் ராஜஸ்தான் அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த போட்டியை பார்க்க தனது சேப்பாக்கம் தொகுதியின் 63 வது வார்டில் திறமை மிகுந்த 120 சிறுவர்கள் காணும் வகையில் அவர்களுக்கு டிக்கெட் வாங்கி தந்து அவர்களுடன் அமர்ந்து ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தார். கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க வேண்டும் என்று பலருக்கு கனவு இருந்தாலும் டிக்கெட் கிடைப்பது அரிதாக உள்ளது. மேலும் டிக்கெட் விலை மிகவும் அதிகமாகவும் உள்ளது.

ஆனால் தனது தொகுதியைச் சேர்ந்த 120 சிறுவர்களுக்கு தனது செலவில் டிக்கெட் வாங்கி கொடுத்து அவர்களுடன் போட்டியை பார்க்க உதவி செய்த அமைச்சர் உதயநிதியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.. மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்..!

பிரபல இயக்குனர் லிங்குசாமிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாத கால சிறை தண்டனை விதித்திருந்த நிலையில் அவருடைய மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

'PS 2' சிவோஹம் பாடலை பாடியது இத்தனை பாடகர்களா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திப் புரமோஷன்

அம்பேத்கரிடம் இருந்து தொடங்குகிறதா அரசியல்? விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு உத்தரவு..!

தளபதி விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் தற்போது ஒரு சமூக இயக்கமாக இயங்கி வருகிறது என்பதும் இந்த இயக்கத்தின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது

எஸ்.எஸ்.ராஜமெளலி - மகேஷ்பாபு படம் எத்தனை பாகங்கள்? கதை என்ன தெரியுமா?

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'ஆர்ஆர்ஆர்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் ரூ.1000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது

'ருத்ரன்' படத்தின் பாடலை எழுதி பாடியவர் 'பிக்பாஸ் சீசன் 6' பிரபலமா?

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான 'ருத்ரன்' திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய