எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது: விநாயகர் சிலை விவகாரம் குறித்து உதயநிதி விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
நாடு முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சிலை படம் ஒன்றை பதிவு செய்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சைக்குள்ளானது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் கட்டிக்காத்த பகுத்தறிவு கொள்கையை உதயநிதி நாசம் செய்துவிட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் இதுகுறித்து உதயநிதி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், ஊழல்கள் குறித்து நான் பகிரும்போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருளாக்காதவர்கள் தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்ததைப் பரபரப்பாக விவாதிக்கிறார்கள். நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு இதைப்பிடித்துக்கொண்டு வவவ்வேறு விதமாகக் கயிறு திரிப்பதைப் பார்க்கையில், இங்கு எது நடந்தாலும் அதைக் கழகத்துக்கு எதிரானதாகத் திசைதிருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதி வேலைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
எனக்கோ, என் மனைவிக்கோ கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு என்பதை அனைவரும் அறிவர். எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில் எங்கள் மூதாதையர்களின் உருவப் படங்கள் உள்ளன. மேலும் என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு. முக்கியமான முடிவெடுக்கும்போது அங்குள்ள மூதாதையர்களின் படங்கள் முன் நின்று அவர்களை மனதில் நினைத்துவிட்டு செய்வது எங்கள் வழக்கம்.
இந்நிலையில் பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலையை வாங்கியிருந்தார். அந்த சிலையை நேற்றிரவு பார்த்த என் மகள், “இந்த சிலையை எப்படி செய்வார்கள்” என்று கேட்டார். இந்த சிலை களிமண்ணில் செய்தது. தண்ணீரில் கரைக்க எடுத்துச் சென்றுவிடுவார்கள்” என்றேன். “இந்த சிலையை எதற்குத் தண்ணீரில் போடணும்' என்று கேட்டார். அதுதான் முறை என்கிறார்கள். அடுத்த வருஷத்துக்குப் புதிதாக வேவறான்று வாங்குவார்கள்” என்றேன்.
“கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக்கொடுங்கள்” என்று கேட்டார். அவரின் விருப்பத்தின் பேரில் நான்தான் அந்தப் புகைப்படத்தை எடுத்தேன். மகள் ரசித்த அந்த சிலையை அவரின் விருப்பத்துக்காக என் டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன். அவ்வளவே.
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
சர்ச்சையும் அதன் உள்நோக்கமும் புரிகிறது. என் அம்மா வைத்து வழிபட்டது. கரையும்முன் மகள் விருப்பத்தின்பேரில் அவர் கைகளில் புகைப்படமானது, அவ்வளவே. pic.twitter.com/4s0csUBP43
— Udhay (@Udhaystalin) August 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments