வங்கியில் இன்று கடன் வாங்கினால் நாளை தள்ளுபடி: உதயநிதி ஸ்டாலின்

கூட்டுறவு வங்கியில் இன்றே அனைவரும் கடன் வாங்குங்கள். நாளை தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கடன் தள்ளுபடி செய்யப்படும் என நடிகரும் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, 'நமது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் வாங்கினால் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்றைக்கோ நாளைக்கோ சென்று கடன் வாங்கி விடுங்கள். நம் தலைவர் வந்தவுடன் அந்த கடனை தள்ளுபடி செய்துவிடுவார் என்று கூறினார்.

மேலும் உதயசூரியன் சின்னத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் தலையில் அவர் செய்த தவறுகளுக்கு நாம் குட்டுகிற குட்டு என்றும், இந்த தேர்தலில் நமது தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் மோடி தான் வில்லன் என்றும், அந்த வில்லனை நீங்கள் அடித்து துரத்தியடிக்க வேண்டும் என்றும் உதயநிதி பேசினார்.

உதயநிதியின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

டிக்டாக் வீடியோ பார்த்த வாலிபர் பரிதாப பலி! நடந்தது என்ன?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள புதியதாக ஒரு கட்டிடத்தின் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.

கருப்பையே இல்லாத பெண்கள்: ஒரு கிராமத்தில் நடக்கும் அதிர்ச்சி தகவல்!

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கிட்டத்தட்ட பாதி பெண்கள் கருப்பை இல்லாமல் உள்ள அதிர்ச்சி தகவல் தற்போது சமூக வலைத்தளங்களின் மூலம் வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது

சட்டசபை தேர்தலிலும் 234 தொகுதிகளில் தனித்து போட்டி! சீமான் அறிவிப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட சீமானின் நாம் தமிழர் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது மட்டுமின்றி டெபாசிட்டையும் இழந்தது.

பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஜடேஜா: உலககோப்பைக்காக வாழ்த்திய மோடி

நேற்று உலகக்கோப்பை கி்ரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அணியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் ஒருவர் ஜடேஜா.

 மகேந்திரனிடம் இருந்து நான் கற்று கொண்டது: ராதாரவி 

நடிகர் ராதாரவி பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் வில்லனாக நடித்து வருகிறார். வில்லத்தனமான நடிப்பில் பலவித பரிணாமங்களை, பல வித்தியாசங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்தியவர் ராதாரவி.