வங்கியில் இன்று கடன் வாங்கினால் நாளை தள்ளுபடி: உதயநிதி ஸ்டாலின்
Send us your feedback to audioarticles@vaarta.com
கூட்டுறவு வங்கியில் இன்றே அனைவரும் கடன் வாங்குங்கள். நாளை தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் கடன் தள்ளுபடி செய்யப்படும் என நடிகரும் மு.க.ஸ்டாலின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியபோது, 'நமது தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் வாங்கினால் தள்ளுபடி செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இன்றைக்கோ நாளைக்கோ சென்று கடன் வாங்கி விடுங்கள். நம் தலைவர் வந்தவுடன் அந்த கடனை தள்ளுபடி செய்துவிடுவார் என்று கூறினார்.
மேலும் உதயசூரியன் சின்னத்தில் விழும் ஒவ்வொரு வாக்கும் மோடியின் தலையில் அவர் செய்த தவறுகளுக்கு நாம் குட்டுகிற குட்டு என்றும், இந்த தேர்தலில் நமது தேர்தல் அறிக்கை கதாநாயகன் என்றால் மோடி தான் வில்லன் என்றும், அந்த வில்லனை நீங்கள் அடித்து துரத்தியடிக்க வேண்டும் என்றும் உதயநிதி பேசினார்.
உதயநிதியின் இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com