ஏஆர் ரஹ்மான் பாடிய 'மாமன்னன்' படத்தின் பாடல்.. 5 நிமிட வீடியோ வைரல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஏஆர் ரகுமான் பாடிய பாடல் வீடியோ சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் ’மாமன்னன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் இந்த படத்தில் இடம்பெற்ற ’ஜிகு ஜிகு ரெயில்’ என்று தொடங்கும் ஏஆர் ரகுமான் பாடிய பாடலை வெளியிட்டுள்ளனர். யுகபாரதி எழுதிய இந்த பாடலின் ஐந்து நிமிட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் விழா ஜூன் ஒன்றாம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது
எல்லாம் மாறும் எல்லாம் மாறும்
— A.R.Rahman (@arrahman) May 27, 2023
உள்ளம் சேந்தா எல்லாம் மாறும் #Maamannan #SecondSingle https://t.co/v1daapa3lt
@Udhaystalin @KeerthyOfficial @RedGiantMovies_ @SonyMusicSouth pic.twitter.com/KK3kJK2Ic6
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com