கீர்த்தி சுரேஷூக்கு கேக் ஊட்டிவிட்ட உதயநிதி ஸ்டாலின்: வைரல் புகைப்படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கேக் ஊட்டி விட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மாமன்னன்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இன்றுடன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷூக்கும், கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கும் கேக் ஊட்டிவிட்டனர். மேலும் மாரி செல்வராஜுக்கு உதயநிதி, கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் கேக் ஊட்டிவிட்டனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது .
உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார்.
With this, we wrapped the second schedule of #MAAMANNAN! ????
— Red Giant Movies (@RedGiantMovies_) June 24, 2022
Can’t wait for the next schedule to begin. @mari_selvaraj @Udhaystalin @KeerthyOfficial @arrahman #Vadivelu #FahadhFaasil @thenieswar @editorselva @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @teamaimpr pic.twitter.com/osDFTTcd1n
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments