தனுஷின் 'கர்ணன்': மாரி செல்வராஜின் மாற்றத்திற்கு உதயநிதி அதிருப்தியா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் கடந்த 1995ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடந்தது என்றும் ஆனால் 1997ம் ஆண்டு திமுக ஆட்சியில் நடந்தது போல் காண்பிக்கப்பட்டு இருப்பதாகவும் இதனை மாற்றுவதற்கு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோர்களிடம் கூறியிருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உதயநிதி தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பதை பார்த்தோம்.
இந்தநிலையில் நேற்று முதல் திரையரங்குகளில் உதயநிதி கூறியபடி ஆண்டுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் 1997 என உதயநிதி கூறியதுபோல் குறிப்பிடாமல் 90களின் பிற்பகுதியில் என குறிப்பிடப்பட்டிருந்ததால் மீண்டும் உதயநிதி இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.
படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் '90-களின் இறுதியில்' என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த நிலையில் தற்போது 90களின் பிற்பகுதியில் இருந்து என்பது 1997 முன் பகுதியிலிருந்து என மீண்டும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.
— Udhay (@Udhaystalin) April 15, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com