close
Choose your channels

சிம்பு பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட உதயநிதி!

Saturday, April 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சிம்பு பாடிய பாடல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் எம்எல்ஏ உதயநிதி கலந்துகொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’தி வாரியர்’. தமிழ் தெலுங்கு மொழியில் உருவாகி வரும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை சிம்பு பாடியிருந்தார். இந்த பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

‘தி வாரியர்’ படத்தின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ஆதித்யா மியூசிக் நிறுவனம், இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைவதை பெருமையாகக் கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளது.

தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சிம்பு பாடிய ’புல்லட்’ பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. மேலும் ‘தி வாரியர்’ திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment