close
Choose your channels

விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா: உதயநிதியின் பழைய பதிவு வைரல்..

Tuesday, February 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 2026 ஆம் திமுகவின் முதல்வர் வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வர் வேட்பாளர்களாக உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி, சீமான் மற்றும் விஜய் ஆகிய ஐந்து பேர் போட்டியிட உள்ளதாக தெரிகிறது

இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் அவர்களுடன் போட்டியா என்ற கேள்விக்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின் ’காமெடி பண்ணாதீங்க ப்ரோ, விஜய் அண்ணா கூட போட்டி போட நான் என்ன லூசா’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

விஜய்க்கு போட்டி இல்லை என உதயநிதி ஸ்டாலின் என்ன தான் 10 ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தாலும், காலம் இருவரையும் நேருக்கு நேர் போட்டியிட வைத்து விடும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment