உதயநிதி-மாரி செல்வராஜ் பட டைட்டில் அறிவிப்பு: ஹீரோயின் இவரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஹீரோயின், இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு ’மாமன்னன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் மேலும் முக்கிய வேடத்தில் பகத் பாசில், வடிவேலு நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த திரைப்படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், மாரிசெல்வராஜ், ஏஆர் ரகுமான் என திரையுலக பிரபலங்கள் ஒரே படத்தில் இணைந்து இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Excited to announce our next, #MAAMANNAN directed by @mari_selvaraj, starring @Udhaystalin @KeerthyOfficial #FahadhFaasil #Vadivelu and music by @arrahman ??????@RedGiantMovies_ @thenieswar @editorselva @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/BICc9DXnD4
— Red Giant Movies (@RedGiantMovies_) March 4, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com