பாஜக அமைச்சரை சந்தித்த உதயநிதி பட இயக்குனர்: பூங்கொத்து கொடுத்து வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும், தயாரிப்பாளரும், திமுக எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை இயக்கிய இயக்குனர், மத்திய பாஜக அமைச்சரை சந்தித்து வாழ்த்து கூறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடித்த ’கண்ணே கலைமானே’ என்ற திரைப்படம் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் மத்திய பாஜக அமைச்சர் எல் முருகன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் சீனு ராமசாமி மத்திய அமைச்சர் எல் முருகன் அவர்களை சந்தித்து தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் உடனிருந்தார். மேலும் இது குறித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்த சீனுராமசாமி, அதில் கூறியிருப்பதாவது
ராசிபுரம் வென்றவர்
நல்லிணக்க உள்ளத்தவர்.
மாற்றுக் கட்சியிலும்
மாண்புநிறை குணங்களை ஆராதிப்பவர்.
சந்தித்த பொழுதில்
திரும்ப சந்திக்கும் ஆவல் உரை நட்பாளர்.
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. எல் முருகன்
அவர்களுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்.
ராசிபுரம் வென்றவர்
— R.Seenu Ramasamy (@seenuramasamy) May 29, 2022
நல்லிணக்க உள்ளத்தவர்.
மாற்றுக் கட்சியிலும்
மாண்புநிறை குணங்களை ஆராதிப்பவர்.
சந்தித்த பொழுதில்
திரும்ப சந்திக்கும் ஆவல் உரை நட்பாளர்.
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. @Murugan_MoS அவர்களுக்கு அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள்.?? pic.twitter.com/OTIcIVRKmg
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments