எங்களின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின்: முன்னாள் மத்திய அமைச்சர் டுவீட்

  • IndiaGlitz, [Monday,March 18 2019]

பாராளுமன்றத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபட தயாராகிவிட்டனர். அந்த வகையில் மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் முதல்கட்டமாக பிரபலங்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினை, தயாநிதி மாறன் சந்தித்து அவருக்கு பொன்னாடை போர்த்தினார். தயாநிதி மாறனுக்கு உதயநிதி வாழ்த்து தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து தயாநிதி மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில், 'முரசொலி நிர்வாக இயக்குநர், எங்களின் ஹீரோ உதயநிதி ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்தப்போது' என்று குறிப்பிட்டுள்ளார்.