ரெட் ஜெயண்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த படம் இதுதான்!

  • IndiaGlitz, [Sunday,July 24 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் பல பிரபலங்களின் படங்களை தமிழகத்தில் ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு படங்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

அருள்நிதி நடித்துள்ள ’டைரி’ என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் ரிலீஸ் செய்யப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு நல்ல புரமோஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இன்னாசி பாண்டியன் இயக்கத்தில், எஸ்.கதிரேசன் தயாரிப்பில், ரான் எதான் யோஹான் இசையில், அரவிந்த்சிங் ஒளிப்பதிவில், ராஜா சேதுபதி படத்தொகுப்பில் உருவாகிய ’டைரி’ திரைப்படம் அருள்நிதியின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.