உதயநிதியுடன் நேருக்கு நேர் மோதும் வைபவ்

  • IndiaGlitz, [Friday,January 17 2020]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ’சைக்கோ’ திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அதே தேதியில் வைபவ் நடித்துள்ள ‘டானா’ என்ற படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதால் உதயநிதி உடன் நேருக்கு நேர் வைபவ் படம் மோதுவது உறுதியாகியுள்ளது.

வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். நோபல் மூவிஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கியிருக்கும் இந்தப் படம் போலீஸ் அதிகாரியாக விரும்பும் ஒருவருக்கு திடீரென கம்பீரக் குரல், பெண் குரலாக மாறினால் என்ன ஆகும் என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு வழக்கமான கதையாக இருக்காது என்றும் தமிழ் சினிமாவின் வித்தியாசமான கதைகளில் இதுவும் ஒன்று என்றும் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.