உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியானது என்பதும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக உதயநிதியின் நடிப்புக்கு அனைத்து விமர்சகர்களும் பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.
தற்போது அனைத்து படங்களுமே திரையரங்கில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடி தளத்திலும் ரிலீசாகி வரும் நிலையில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படமும் ரிலீசான ஒரு மாதத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
The most important film of 2022, Udhayanidhi's #NenjukuNeedhi is streaming on June 23 only on SonyLIV.#NenjukuNeedhiOnSonyLIV @ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl #RomeoPictures @mynameisraahul @RedGiantMovies_ @Arunrajakamaraj
— Boney Kapoor (@BoneyKapoor) June 16, 2022
@actortanya @Aariarujunan pic.twitter.com/7rlUgSyhlx
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com