உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

உதயநிதி நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவான ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 20ஆம் தேதி வெளியானது என்பதும் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. குறிப்பாக உதயநிதியின் நடிப்புக்கு அனைத்து விமர்சகர்களும் பாசிட்டிவ் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் திரையரங்கில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது சமூக வலைத்தளத்தில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் ஜூன் 23ஆம் தேதி சோனிலைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்து உள்ளார்.

தற்போது அனைத்து படங்களுமே திரையரங்கில் ரிலீஸ் ஆன ஒரே மாதத்தில் ஓடிடி தளத்திலும் ரிலீசாகி வரும் நிலையில் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படமும் ரிலீசான ஒரு மாதத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே ஒரு வெற்றிப்படம்: இன்ஸ்டாவில் கிளாமரை அள்ளி வீசும் இளம் நடிகை!

தமிழ் திரை உலகில் ஒரே ஒரு வெற்றிப் படத்தில் நடித்த இளம் நடிகை இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்களை அள்ளி வீசி வருவதை அடுத்து அந்த் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

'சந்திரமுகி 2' படத்தின் நாயகி இந்த இருவரில் ஒருவரா?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. சென்னையில் இந்த படத்தின் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2 முறை திருமணம் செய்த தொழிலதிபருக்கு 3வது மனைவியாகிய சூர்யா பட நடிகை!

 2 முறை திருமணம் செய்த தொழிலதிபரை சூர்யா படத்தில் நடித்த நடிகை ஒருவர் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

14வது திருமண நாளை கொண்டாடும் அஜித் பட நாயகி: ரசிகர்கள் வாழ்த்து!

அஜித் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை இன்று தனது 14வது திருமண நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

'டான்' படத்தை பாராட்டிய பிரபல அரசியல் கட்சி தலைவர்: படகுழுவினர் உற்சாகம்

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பதும் தெரிந்ததே.