உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி': முக்கிய தகவலை பகிர்ந்த அருண்ராஜா காமராஜ்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகிய ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’நெஞ்சுக்கு நீதி’ படத்தின் சென்சார் தகவலை பகிர்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டதை அடுத்து ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ்குமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.
 

More News

சுசீந்திரன் இயக்கும் பான் - இந்தியா திரைப்படம்: ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் 'வீரபாண்டியபுரம்' மற்றும் 'குற்றம் குற்றமே' ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன நிலையில் தற்போது அவர் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

விஜய் செய்த செயலால் துள்ளிக்குதித்த அபர்ணா தாஸ்: வைரல் வீடியோ

'பீஸ்ட்' படப்பிடிப்பின்போது விஜய் செய்த செயலால் அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை அபர்ணா தாஸ் துள்ளிகுதித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் திருமணம்:  வைரல் புகைப்படம்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்  அவர்களின் மகள் திருமண புகைப்படம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

'வெந்து தணிந்தது காடு' பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி: பாடலை எழுதியது இந்த பிரபலமா?

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.

கடவுளை மன்னிக்க ஒரே காரணம் இதுதான்: மேக்னா ராஜ்

நான் கடவுளை மன்னிக்க ஒரே காரணம் இதுதான் என மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவியும் நடிகையுமான மேக்னாராஜ் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்