உதயநிதியின் 'மாமன்னன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இசை புயல் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ‘மாமன்னன்’ திரைப்படம் கடந்த மாதம் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சி முடிந்ததுமே பாசிட்டிவ் ரிசல்ட் தெரியவந்துள்ளதை அடுத்து இந்த படம் வசூலில் சக்கை போடு போட்டது. இந்த படத்தின் வசூல் 50 கோடி ரூபாயை நெருங்கி விட்டதாக டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘மாமன்னன்’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஜூலை 27ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ‘மாமன்னன்’ நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய அந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
VADIVELU, UDHAYANIDHI, FAHADH, KEERTHY, MARI SELVARAJ AND AR RAHMAN TOGETHER!! We’re seeing stars🤩#Maamannan, coming to Netflix on the 27th of July!🍿#MaamannanOnNetflix pic.twitter.com/Fl8ulKvdID
— Netflix India South (@Netflix_INSouth) July 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com