உதயநிதியின் அடுத்த பட ஃபர்ஸ்லுக் போஸ்டர்!

  • IndiaGlitz, [Friday,August 02 2019]

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணே கலைமானே' என்ற திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் சைக்கோ, ஏஞ்சல், கண்ணை நம்பாதே ஆகிய மூன்று திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சற்று முன் அவர் நடித்து வரும் 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமாக இருக்கும் இந்த பஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அருள்நிதி நடித்த 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்தை இயக்கிய மு.மாறன் என்பவர் இயக்கியுள்ளார். உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா, சதீஷ், பூமிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். மனோகரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகிவரும் இந்த படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் டைட்டில் கடந்த 1975ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த 'நினைத்ததை முடிப்பவன்' படத்தில் இடம்பெற்ற பாடலில் உள முதல் வரி என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் மு.மாறனின் முதல் படம் போலவே இந்த படமும் க்ரைம், திரில் சஸ்பென்ஸ் அம்சங்கள் கொண்ட படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்புகள் முடிந்து அடுத்த கட்டமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.