ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக நிவாரண உதவி: 300 நபர்களுக்கு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து இன்று வரை தினமும் தனது தொகுதிக்கு சென்று தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி அவர்களும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா அவர்களும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி E.ஆறுமுகம் அவர்களும் இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators Association உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதுகுறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ்-ன் பட பிரதிநிதிகளுக்கு பேரிடர் காலத்தில் உதவிடும் வகையில், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக வழங்கும் நிகழ்வை இன்று சென்னை ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் தொடங்கி வைத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள @RedGiantMovies_-ன் பட பிரதிநிதிகளுக்கு பேரிடர் காலத்தில் உதவிடும் வகையில், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக வழங்கும் நிகழ்வை இன்று சென்னை ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் தொடங்கி வைத்தேன். pic.twitter.com/4fSFaS85q7
— Udhay (@Udhaystalin) June 26, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments