ரெட் ஜெயண்ட் மூவீஸ் சார்பாக நிவாரண உதவி: 300 நபர்களுக்கு வழங்கிய உதயநிதி எம்.எல்.ஏ!

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது தெரிந்ததே. மேலும் தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து இன்று வரை தினமும் தனது தொகுதிக்கு சென்று தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு.M.செண்பகமூர்த்தி அவர்களும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா அவர்களும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிர்வாகி E.ஆறுமுகம் அவர்களும் இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் திரையரங்கு பிரதிநிதிகள் மற்றும் All Movie Mediators Association உறுப்பினர்கள் 300 நபர்களுக்கு அரிசி, மளிகை சாமான்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். இதுகுறித்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டரில், ‘தமிழ்நாடு முழுவதும் உள்ள ரெட் ஜெயண்ட் மூவீஸ்-ன் பட பிரதிநிதிகளுக்கு பேரிடர் காலத்தில் உதவிடும் வகையில், அரிசி, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக வழங்கும் நிகழ்வை இன்று சென்னை ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்தில் தொடங்கி வைத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

More News

தெலுங்கு 'அசுரன்' படத்திற்கு வந்த சோதனை: ரசிகர்கள் அதிருப்தி!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான 'அசுரன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே.

விக்ரமுடன் இருக்கும் இந்த சிறுவன், இன்று ஹீரோ: யாரென தெரிகிறதா?

மேலே உள்ள புகைப்படத்தில் விக்ரம் மற்றும் சுஜித்ரா ஆகிய இருவருடன் இருக்கும் சிறுவன் இன்று தமிழ், மலையாள திரையுலகில் ஹீரோவாக இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

மீண்டும் இணைந்த விஜய்சேதுபதி-தமன்னா: வைரல் புகைப்படம்

விஜய்சேதுபதி மற்றும் தமன்னா ஆகிய இருவரும் சீனு ராமசாமி இயக்கிய 'தர்மதுரை' என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார்கள் என்பதும் இருவருமே டாக்டர் கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது

கமல்ஹாசன் பெயரை எழுதியே உலக சாதனை செய்த பெண்!

கமல்ஹாசனின் பெயரை மட்டுமே எழுதி உலக சாதனை செய்த இளம்பெண்ணுக்கு கமலஹாசன் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று நடைபெற இருப்பதாக ஏற்கனவே வந்த செய்திகளைப் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இயக்குனர் ஷங்கரின்