கடைசி படத்தை வெற்றிப்படமாக கொடுத்த மாரி செல்வராஜ்.. உதயநிதி கொடுத்த கிப்ட் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் மற்றும் வடிவேலு நடித்த ’மாமன்னன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்கள் மட்டும் இன்றி இந்த படம் வசூலிலும் சாதனை செய்து வருகிறது என்பதும் இதுவரை வெளியான உதயநிதியின் படங்களில் இதுதான் மிகப்பெரிய ஓப்பனிங் வசூல் கொடுத்த படம் என்றும் கூறப்பட்டு வருகிறது
இந்த நிலையில் தனது கடைசி படத்தை வெற்றி படமாக கொடுத்த இயக்குனர் மாரி செல்வராஜ் க்கு உதயநிதி ஸ்டாலின் கார் பரிசளித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள்.
உலக தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூக நீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது.
வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை,… pic.twitter.com/ro4j7epjAI
— Udhay (@Udhaystalin) July 2, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments