திருவாரூர் திமுக வேட்பாளராக பிரபல நடிகர்?

  • IndiaGlitz, [Thursday,January 03 2019]

திருவாரூரில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டு இன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டது இந்த நிலையில் இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற நெருக்கடி இருப்பதால் இந்த தொகுதியில் திமுக பிரபலம் ஒருவர்தான் போட்டியிட வாய்ப்பு அதிகம் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் இந்த தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினே போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டது. இதுகுறித்து நேற்று பேட்டியளித்த ஸ்டாலின், 'நாளை மாலை 5 மணிக்கு திமுக வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும். அப்போது அந்த தொகுதியில் போட்டியிடுவது நானா? துரைமுருகனா? அல்லது டி.ஆர்.பாலுவா? என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.

இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து அவரது ரசிகர்கள் சார்பில் திமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

 

More News

'ஓவியா' பட டிசரை வெளியிட்ட கே.பாக்யராஜ்

இயக்குனர் கே.பாக்யராஜ் விரைவில் வெளிவரவுள்ள த்ரில் திரைப்படமான 'ஓவியா' என்ற படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்.

ஆரவ்வின் 'ராஜபீமா' படத்தில் ஓவியாவின் கேரக்டர் இதுதான்!

பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ் நடித்து வரும் 'ராஜபீமா' படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஓவியா நடித்து வருகிறார் என்பதும், இருவரும் இணைந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர் என்பதும் தெரிந்ததே

விஜயகாந்துடன் அஜித்தை ஒப்பிட்ட ஜோதிகா! ஏன் தெரியுமா?

இந்த உலகமே விளம்பரமயமாகிவிட்ட நிலையில் அரிதிலும் அரிதாக ஒருசிலரே தாங்கள் செய்யும் உதவியை கூட விளம்பரம் செய்யாமல் இருக்கும் குணம் கொண்டவர்களாக உள்ளனர்.

கிறிஸ்துமஸ் ரிலீஸ் பட நாயகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு

கடந்த கிறிஸ்துமஸ் தினத்தில் 'கனா', 'சீதக்காதி', 'அடங்கமறு', 'மாரி 2' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' என ஐந்து தமிழ் திரைப்படங்கள் வெளியானது தெரிந்ததே

சிவகார்த்திகேயனை நெகிழ வைத்த ஏ.ஆர்.முருகதாஸ்

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்த 'கனா' திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்தியாவின் முதல் பெண்கள் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட