கதையோடு கழகத்தை காட்சிப்படுத்திய பா.ரஞ்சித்: உதயநிதி பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடித்த ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் திரை விமர்சகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த படத்தில் கடந்த எழுபதுகளில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி, அதை அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு எதிர்கொண்ட விதம் ஆகியவை கதையின் ஊடே அவ்வப்போது இணைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏவும் நடிகருமான உதயநிதி குறிப்பிட்டு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார். அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது. கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யா, கழகத்துக்கார் ரங்கன் வாத்தியாராக பசுபதி, டான்ஸிங் ரோஸ் ஷபீர், வேம்புலி ஜான் கொக்கேன், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா ரஞ்சித்துக்கும், ட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்’ என கூறியுள்ளார்.
கபிலனாக அசத்தியுள்ள நண்பர் @arya_offl, கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக @PasupathyOffl சார், டான்ஸிங் ரோஸ் @shabzkal, வேம்புலி @johnkokken1,#JohnVijay என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் @beemji-க்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.2/2
— Udhay (@Udhaystalin) July 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments