இது என்னுடைய தவறுதான், அட்மின் மீது பழிபோட மாட்டேன்: உதயநிதி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் உதயநிதி நடித்த 'கண்ணே கலைமானே' சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் தற்போது சினிமா, அரசியல் என துறைகளிலும் ஈடுபட்டு வருகிறார். அரசியலை பொருத்தவரை அவர் அவ்வப்போது கமல்ஹாசனை தாக்கி வருவது தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் கமல், ரஜினி இருவரும் ஜெயலலிதாவுக்காக உண்ணாவிரதம் இருந்ததாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்தார். உண்மையில் அந்த புகைப்படம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ரஜினி, கமல் உள்பட நடிகர்கள் உண்ணாவிரதம் இருந்தது போது எடுத்தது. ஆனால் யாரோ ஒரு குறும்புக்காரர் அந்த புகைப்படம் ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது அவரை விடுதலை செய்ய உண்ணாவிரதம் இருந்தது போல் போட்டோஷாப் செய்ததை உண்மை என நம்பி உதயநிதியும் அந்த புகைப்படத்தை பதிவு செய்தார்.
ஆனால் சில நிமிடங்களில் உண்மையை கண்டறிந்து அந்த புகைப்படத்தை நீக்கியதோடு, முதல்முறையாக உறுதி செய்யாமல் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துவிட்டேன். இது என்னுடைய தவறுதான். தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் என் அட்மின் மீது பழிபோட மாட்டேன்' என்று கூறியுள்ளார். உதயநிதியின் இந்த நக்கல் கலந்த பெருந்தன்மையான டுவீட்டுக்கு சமூக வலைத்தள் பயனாளிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Had posted a fotoshopped pic without verifying for the first time ! Sorry ! Deleted it ! My mistake ! Not my admins!
— Udhay (@Udhaystalin) February 26, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments