வடிவேலு கையில் துப்பாக்கி.. உதயநிதி கையில் வாள்.. 'மாமன்னன்' படத்தின் மாஸ் போஸ்டர்..!

  • IndiaGlitz, [Monday,May 01 2023]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்தோம்.

மேலும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இந்த படத்தின் போஸ்டரில் இருந்து வடிவேலு கையில் துப்பாக்கியும், உதயநிதி கையில் வாளும் இருப்பதை பார்க்கும் போது வடிவேலுக்கு கதையில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிய வருகிறது. உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா படத்தொகுப்பு உருவாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

நள்ளிரவில் சர்ப்ரைஸ் ஆக வந்த 'ஏகே 62' டைட்டில்.. அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நள்ளிரவு 12 மணிக்கு வெளியானதை அடுத்து அஜித் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக உள்ளது. 

'வெந்து தணிந்தது காடு 2': சூப்பர் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம்

'லியோ' படத்தில் இணையும் 'விக்ரம்' நடிகர்.. LCU உறுதியாகிறதா?

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் 'விக்ரம்' படத்தில் நடித்த முக்கிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளதை அடுத்த இந்த படம் LCU படம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் கருத்து

'பொன்னியின் செல்வன் 2' இரண்டு நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான 'பொன்னியின் செல்வன் 2'  திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது

தயவுசெய்து இதை மட்டும் செய்யுங்கள்: 'லியோ' இயக்குனருக்கு கேரள விஜய் ரசிகர் கடிதம்..!

கேரளாவை சேர்ந்த தளபதி விஜய்யின் ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ்-க்கு எழுதிய கடிதத்தில் கேரளாவில் விஜய்யுடன் கூடிய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.