மகனை ஆச்சரியத்துடன் பார்க்கும் உதயநிதி: அப்படி என்ன செய்தார் இன்பநிதி?

  • IndiaGlitz, [Thursday,June 30 2022]

நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தனது மகனை ஆச்சரியத்துடன் பார்க்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் திரையுலகிலும் அரசியலிலும் பல வெற்றிகளை பெற்று வருகிறார் என்பதும் தற்போது அரசியல் திரையுலகம் என இரண்டிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகிறார் என்பது தெரிந்ததே.

கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆன உதயநிதி அந்த தொகுதிக்கு பல்வேறு நன்மைகளை செய்து வருகிறார் அதேபோல் இன்னொரு பக்கம் ’நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தையும் ரிலீஸ் செய்து அந்த படத்தையும் வெற்றி படமாக்கினார்.

இந்த நிலையில் உதயநிதியின் மகன் இன்பநிதி ஒரு விளையாட்டு வீரர் என்பது பலர் அறிந்ததே. குறிப்பாக கால்பந்து வீரரான இவர் அணிக்கு தமிழகத்திலிருந்து நெரோகா எப்சி என்ற அணியில் விளையாட தகுதி பெற்று இருந்தார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இன்பநிதி ஒரு கால்பந்து வீரர் என்பதால் உடலை பிட்னஸ் ஆக வைத்திருப்பதில் பெரும் அக்கறை காட்டி வருகிறார். இந்த நிலையில் இன்பநிதி தனது கையை மடக்கி ஆர்ம்ஸை அவர் காட்டுவதை உதயநிதி ஆச்சரியத்துடன் பார்க்கும் புகைப்படம் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் பார்ப்பது வைரலாகி வருகிறது.