துபாயில் சிஎஸ்கே ரசிகர்களுடன் உதயநிதி-இன்பநிதி: வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Saturday,October 16 2021]

சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் இறுதிப் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அந்த அணிக்கு 20 கோடி பரிசு வழங்கப்பட்டது என்பதும் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட டூபிளஸ்சிஸ் மற்றும் ஆரஞ்சு கேப் பெற்ற ருத்ராஜ் ஆகியோர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சென்னை அணியின் வெற்றியை சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில் இந்த போட்டியை தமிழ் திரைப்பட நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி தனது மகன் இன்பநிதியுடன் துபாய் மைதானத்தில் நேரில் கண்டு ரசித்தார். நேற்றைய போட்டியின் நேரலையின்போது உதயநிதி ஸ்டாலின் போட்டியை கண்டு ரசிப்பது குறித்த காட்சிகள் இடம் பெற்றது.

இந்த நிலையில் துபாய் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுடன் உதயநிதி மற்றும் இன்பநிதி எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.