மலையுச்சியில் 'கெத்தாக' தொங்கிய உதயநிதி-எமிஜாக்சன்
Send us your feedback to audioarticles@vaarta.com
உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்து வந்த 'கெத்து' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்ததை அடுத்து, தற்போது பாடல் காட்சிகளும் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த படத்தின் நாயகி எமிஜாக்சன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'கெத்து' படத்தின் கடைசி பாடலின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. இந்த பாடல் காட்சிகளுக்காக செங்குத்தான மலையில் தொங்கிக்கொண்டு நானும் உதயநிதியும் தைரியமாக நடித்துள்ளோம்' என்று கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், விக்ராந்த், சத்யராஜ், கருணாகரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைதுள்ளார். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ராஜமோகன் படத்தொகுப்பு செய்துள்ளார். திருக்குமரன் இயக்கிய இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
'கெத்து' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து உதயநிதி விரைவில் 'என்றென்றும் புன்னகை' இயக்குனர் அகமது இயக்கத்தில் 'ஜாலி எல்.எல்.பி' ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் உதயநிதியுடன் மீண்டும் ஹன்சிகா. ஜோடி சேர்வதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments