உதயநிதியின் 'மாமன்னன்' ரிலீஸ் தேதி இதுவா? பிரபல நடிகரின் படத்துடன் மோதுகிறதா?

  • IndiaGlitz, [Tuesday,April 18 2023]

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘மாமன்னன்’ படத்தை வரும் ஜூன் மாதம் பக்ரீத் திருநாளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதே தினத்தில் ஏற்கனவே தனது ’மாவீரன் ’படத்தை ரிலீஸ் செய்ய சிவகார்த்திகேயன் திட்டமிட்டு இருந்த நிலையில் ‘மாமன்னன்’ மற்றும் ’மாவீரன்’ ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் ஆவதற்கு முன்பே படப்பிடிப்பு முடிந்துவிட்ட ‘மாமன்னன்’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் பகத் பாசில், வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கன்னட சூப்பர் ஸ்டாருடன் சிஎஸ்கே மேட்ச் பார்த்த தனுஷ்.. வைரல் புகைப்படங்கள்..!

நேற்று சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி

தென்னாப்பிரிக்கா படப்பிடிப்பில் கமலுக்கு நன்றி கூறிய ஷங்கர்.. ஏன் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது

ரவீந்திர ஜடேஜாவின் மனைவி கிரிக்கெட் விளையாடி பார்த்த் இருக்கீங்களா? செம வீடியோ..!

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல்ரவுண்டரும் சிஎஸ்கே அணி வீரருமான ஜடேஜா களத்தில் இருந்தாலே அதிரடியாக இருக்கும் என்பதும் அவர் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் பௌலராக இருந்தாலும் ரசிகர்களின்

ஆள விடுங்க சாமி.. தோனியை பார்த்து தெறித்து ஓடிய தீபக் சஹார்...!

நேற்றைய போட்டியில் தல தோனி களத்தில் இறங்கும் முன் பிராக்டிஸ் செய்து கொண்டிருக்கும்போது அவரை பார்த்து தீபக் சஹார் தெறித்து ஓடிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

ஜெயம் ரவி மனைவி பிறந்த நாள் பார்ட்டியில் இத்தனை பிரபலங்களா? வைரல் புகைப்படங்கள்..!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடிய நிலையில் அவருடைய பிறந்தநாள் பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.