5 வருடங்களுக்கு பின் மீண்டும் இணையும் வெற்றி கூட்டணி?

  • IndiaGlitz, [Wednesday,August 31 2016]

பிரபல தயாரிப்பாளராக இருந்த உதயநிதியை கடந்த 2012ஆம் ஆண்டு 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோ ஆக்கியவர் எம்.ராஜேஷ். இந்த படத்திற்கு பின்னர் உதயநிதி நடித்த ஒருசில படங்கள் சுமாராக ஓடினாலும் சமீபத்தில் வெளிவந்த 'மனிதன்' வசூல் அளவில் பெரிய வெற்றி பெற்றதோடு, உதயநிதியின் மெச்சூரிட்டியான நடிப்பையும் வெளிக்காட்டியது.
உதயநிதி தற்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் கவுரவ் நாராயணன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் தன்னை ஹீரோவாக்கிய எம்.ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 2017-ல் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சந்தானம் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.
எம்.ராஜேஷ் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் பிசியாக உள்ளார். இந்த பணி முடிந்தவுடன் அவர் உதயநிதி படத்தின் ஸ்கிரிப்டை எழுத தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு தேதி மற்றும் நேரம்

கோலிவுட் திரையுலகில் இளையதலைமுறை நடிகர்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய ஜெயம் ரவி, தற்போது 'போகன்' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அரவிந்தசாமி...

'இருமுகன்' படத்திற்கு 'UA'சர்டிபிகேட் ஏன் தெரியுமா?

சீயான் விக்ரம் ஹீரோ, வில்லன் என இரண்டு அட்டகாசமான வேடங்களில் நடித்துள்ள 'இருமுகன்' வரும் செப்டம்பர் 8ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது...

ஜெயம் ராஜா-சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த புன்னகை அரசி

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் ரிலிஸ் தேதியை அவருடைய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில்...

ரஜினி, கமல், விஜய் இடத்திற்கு மகேஷ்பாபுவை அழைத்து செல்லும் முருகதாஸ்

இந்தியாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரும் தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி படங்களை இயக்கியவருமான ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினி-ரஞ்சித் மீண்டும் இணையும் படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

சமீபத்தில் தனுஷ் ஒரு மிகப்பெரிய செய்தியை வெளியிட்டார். ரஜினிகாந்த் நடிப்பில் ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிப்பதில் பெருமை அடைகிறேன்...