பாஜக உதவியை நாடும் உதயநிதி: தட்டிக்கழித்த ஹெச்.ராஜா

  • IndiaGlitz, [Saturday,November 04 2017]

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் முதலில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தமிழிசை மற்றும் ஹெச்.ராஜா புண்ணியத்தில் சூப்பர் ஹிட்டாகி தற்போது ரூ.200 கோடிக்கும் மேல் வசூலையும் பெற்றுவிட்டது

இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'இப்படை வெல்லும்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், 'மெர்சல் படத்திற்கு முழு புரமோஷன் கொடுத்தது பாஜகதான். அதேபோல் என்னுடைய 'இப்படை வெல்லும்' படத்திற்கும் ஹெச்.ராஜா, தமிழிசையை பேச வைக்கலாம்ன்னு நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்

இதற்கு பதிலளித்துள்ள ஹெச்.ராஜா, 'ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம்' என்று தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக திட்டமிட்டு கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியை திரைப்படங்களின் புரமோஷன் கருவியாக கோலிவுட் திரையுலகினர் பார்த்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உதயநிதியின் 'இப்படை வெல்லும்' திரை முன்னோட்டம்

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருந்தபோதிலும் தன்னுடைய உழைப்பால் முன்னேறி வருபவர்.

திமுக, அதிமுக செய்யாததை செய்து காட்டிய சின்ன கிராமம்

ஒவ்வொரு ஆண்டும் மழை வரும் போது வெள்ளத்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதும், வயல்களில் உள்ள பயிர்கள் அழிவதும், மழை நின்ற ஒருசில மாதங்களில் குடிதண்ணீருக்கு பக்கத்து மாநிலங்களை கையேந்தும்

கமல் முதல்வர் ஆவது ஷங்கர் கையில்தான் உள்ளது. செல்லூர் ராஜூ

தமிழக அமைச்சர்களில் செல்லூர் ராஜூ அளவுக்கு சமூக வலைத்தளங்களில் யாரும் கலாய்க்கப்பட்டிருக்க மாட்டார் என்பது தமிழக மக்கள் அறிந்ததே.

கமல்-ஷங்கர் இணையும் 'இந்தியன் 2' படத்தின் இசையமைப்பாளர் இவரா?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்னம் இயக்கும் படங்கள் என்றாலே அதன் இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பதை சின்னக்குழந்தை கூட சொல்லிவிடும்.

விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு: நன்றி கூறிய நடிகர் ஜெய்

தளபதி விஜய் நடித்த அதிரடி ஆக்சன் படமான 'பகவதி' எந்த அளவுக்கு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பதை சொல்ல தேவையில்லை. இந்த படத்தில் விஜய்யின் தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருந்தார்