உதயநிதியின் 'இப்படை வெல்லும்' திரை முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர் மற்றும் தயாரிப்பாளர்களில் ஒருவர் உதயநிதி ஸ்டாலின். மிகப்பெரிய அரசியல் பின்புலம் இருந்தபோதிலும் தன்னுடைய உழைப்பால் முன்னேறி வருபவர். இவர் நடித்த 'இப்படை வெல்லும்' திரைப்படம் வரும் 9ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.. இந்த படத்தை மிகப்பெரிய நிறுவனமான லைகா நிறுவனம் தயாரித்துள்ளதால் நல்ல புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது
உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமாமோகன், ராதிகா, சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கவுரவ் நாராயணன் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரிச்சர்டு நாதன் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் சென்சாரில் 'யூஏ' சான்றிதழ் பெற்றுள்ளது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தின் மூன்று பாடல்களை எழுதிய பாடலாசிரியர் அருண்காமராஜ் தனது பாடல்கள் குறித்து கூறியபோது, 'இந்தப் படத்துல மூணு பாட்டு எழுதியிருக்கேன். வழக்கமா நான் எழுதுறமாதிரி இல்லாம புது ஜானர்ல ட்ரை பண்ணலாம்னு டைரக்டர் சொன்னாரு. மாஸ் பாட்டுனு இல்லாம கதையம்சத்தோட வரும் சூழல்ல பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சது. இமான் சாருக்கும் டைரக்டர் கெளரவ் சாருக்கும்தான் நன்றி சொல்லணும்' என்று கூறினார்.
இந்த படத்தில் இடம்பெற்ற்ற 'குலேபா வா' என்ற பாடலை எழுதிய மதன்கார்க்கி கூறியபோது, 'இமான் வெளிநாடுகளில் உள்ள தமிழர்களை வழக்கமாக தனது இசையமைப்பில் பாடவைப்பார். இந்தப் படத்துலேயும் அப்படி மூணு பேரைப் பாட வெச்சிருக்கார். எனக்கு அருண்ராஜா காமராஜின் பாடல்கள் எல்லாம் பிடிக்கும். எளிமையான வார்த்தைகளை மிகச்சரியான இடத்தில் போட்டு எழுதுவார். இந்தப் படத்துல பாடல் எழுதுனது மகிழ்ச்சி" என்று கூறினார்.
இசை வெளியீட்டு விழாவின் போது நாயகி மஞ்சிமா கூறியபோது, '"எனக்கு இதுதான் முதல் இசை வெளியீட்டு விழா. ஷூட்டிங் ஸ்பாட்ல உதய் சார் அவ்ளோ ஜாலியா சிரிச்சிட்டே இருப்பார். ஆனா, கேமரா முன்னாடி சீரியஸா மாறிடுவார்" என்று கூறினார்
இசையமைப்பாளர் இமான் தனது பங்களிப்பு குறித்து கூறியபோது, ''டைரக்டர் கதை சொன்னதைவிட ரெண்டு மடங்கு ஸ்கிரீன்ல கொண்டு வந்திருக்கார். வேற விதமான பாடல்களைக் கொடுத்திருக்கார் அருண்ராஜா காமராஜ். மை ஸ்வீட் டார்லிங் மதன் கார்க்கி, ஸ்பாட்லேயே சில வரிகள் எழுதிக் கொடுத்தார். இந்தப் படைக்கு நன்றிகள்' என்று கூறினார்
இந்த படத்தில் நடித்தது குறித்து உதயநிதி கூறியபோது, 'இந்தப் படத்துல தெரியாம ஒத்துக்கிட்டோமானு சில நேரம் நினைச்சிருக்கேன். ஏன்னா, என்னை வெச்சு செஞ்சுட்டாங்க இந்தப் படத்துல. கெளரவ் வீட்டுக்கு வந்து கதை சொல்லும்போது, கண்ணாடி க்ளாஸ் எல்லாம் உடையிற அளவுக்கு எமோஷனோட சொன்னார். இந்தப் படத்துல நானும் மஞ்சிமாவும் ரெண்டே ரெண்டு காஸ்ட்யூம்தான் பயன்படுத்திருப்போம். ஒரு சில ஷாட் எடுக்கும்போது கேமரா எங்கெல்லாம் வெச்சிருக்காங்க, எத்தனை கேமரா வெச்சிருக்காங்கனே தெரியாது. படம் ஓடுறதைவிட நான் இந்தப் படத்துல நிறைய ஓடியிருக்கேன்' என்று கூறினார்
இயக்குனர் கவுரவ் இந்த படம் குறித்து கூறியபோது, 'இந்தப் படத்துக்காக உதயநிதி ரொம்ப மெனக்கெட்டார். நான் சரியா ஷாட் வரலைனு டென்ஷன் ஆனாலும் கூலா சிரிச்சுக்கிட்டே 'ஒன் மோர் சொல்லுங்க'னு நடிப்பார். விரைவில் 'இப்படை வெல்லும்-2' அறிவிப்பும் வரும்' என்று கூறினார்
உதயநிதி, மஞ்சிமா மோகன், கவுரவ், இமான், ஆர்.கே.சுரேஷ், லைகா நிறுவனம் என பெரிய டீம் இணைந்துள்ள இந்த படம் ரசிகர்களுக்கு திருப்தியை அளித்ததா? என்பதை வரும் 9ஆம் தேதி விமர்சனத்தில் பார்ப்போம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments