ரஜினி, கமலை அடுத்து தீவிர அரசியலில் குதித்த இன்னொரு நடிகர்

  • IndiaGlitz, [Monday,January 22 2018]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலில் குதித்துள்ளனர். மேலும் விஷால் உள்பட இன்னும் ஒருசில நடிகர்களும் அரசியலில் குதித்த தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது தீவிர அரசியலில் குதிக்கும் நேரம் வந்துவிட்டதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசியல் பின்னணியில் இருக்கும் உதயநிதி, எந்த நேரத்திலும் தீவிர அரசியலில் குதிக்கும் வாய்ப்புள்ளது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அது நிஜமாகியுள்ளது,.

வரும் சட்டமன்ற தேர்தலின்போது உதயநிதி, தேர்தல் அரசியலில் குதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதற்காக அவர் தனது ரசிகர் மன்றத்தை மாநிலம் முழுவதும் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. வரும் தேர்தலில் திமுகவின் வேட்பாளராக உதயநிதி தமிழகத்தின் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது