close
Choose your channels

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற 'உடன்பால்'.. படக்குழுவினர் பெருமிதம்..!

Friday, December 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் பல முக்கிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘உடன்பால்’ என்ற திரைப்படத்திற்கு விருது கிடைத்துள்ளதாக படக்குழுவினர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்

கடந்த ஆண்டு வெளியான ‘உடன்பால்’ திரைப்படத்தில் லிங்கா, காயத்ரி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர் என்பதும் சக்தி பாலாஜி இசையில் உருவான இந்த படத்தை கார்த்திக் சீனிவாசன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வெளியான போது பொருளாதார ஆதிக்க சமூகத்தில் நசுக்கப்படும் உறவுகளையும் அதன் பூமராங் ரியாக்சன்களையும் நகைச்சுவையுடன் கூறி இருந்ததாக விமர்சனங்கள் வெளியாகின,.

இந்த நிலையில் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் விருது பெற்றுள்ளதால் படக்குழுவினர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் திரைப்பட விழாவில் திரையிட்ட போது படத்தை பார்த்தவர்கள் ரசித்து பார்த்தனர் என்பதும் கரகோஷமிட்டு கொண்டாடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment