3 மாதமா விவசாயமே பார்க்கல… ரூ.3.71 கோடி மின்கட்டணம்!!! அதிர்ச்சி தகவல்!!!

  • IndiaGlitz, [Wednesday,September 09 2020]

 

ராஜஸ்தான் மாநிலத்தின் உதயப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் பெமாரம் மனதங்கி எனும் விவசாயிக்கு மின்சார வாரியத்தில் இருந்து ஒரு விவரப்பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கடந்த 2 மாதத்தில் அவர் பயன்படுத்தியதற்கான மின்கட்டணத் தொகைக்கான விவரம் அனுப்பப்பட்டு இருந்தது. தொகை எவ்வளவு தெரியுமா? 3 கோடியே 71 லட்சத்து 61 ஆயிரத்து 507 ரூபாய். இந்தத் தொகையைப் பார்த்து அந்த கிராமமே அதிர்ந்து இருக்கிறது.

இதுதொடர்பாக மின்சார வாரியத்தில் இருந்து பெமாராமுக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்பும் விடுக்கப்பட்டு இருந்தது. பின்னர் மொராம் மின்சார வாரியத்தில் விசாரித்து இருக்கிறார். நான் கடந்த 3 மாதங்களாக விவசாய வேலையே பார்க்கவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி இவ்வளவு தொகை வந்திருக்கும் எனக் கேள்வி எழுப்பிருக்கிறார். அதற்குப் பதில் அளித்த அதிகாரிகள் தவறுதலாக அச்சடிக்கப் பட்டு விட்டது என தெரிவித்து இருக்கின்றனர்.

இறுதியாக பெமாராமுக்கு மின்கட்டணம் ரூ.6 ஆயிரம் என நிர்ணயிக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொகையை பெமாராம் மின்சார வாரியத்திலும் செலுத்தி இருக்கிறார். இதேபோல அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவருக்கு ரூ.1.71 லட்சம் மின்கட்டணம் வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரும் கடந்த 2 மாதமாக கடையே நடத்தவில்லை, எப்படி இவ்வளவு தொகை வந்திருக்கும் என கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்நிலையில் அவ்வபோது மின்சார வாரியத்தில் நடக்கும் இதுபோன்ற சில சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி விடுகிறது எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.