குழந்தையுடன் உபெர் நிறுவனத்தில் டிரைவர் வேலை செய்யும் சிங்கப்பெண்: திரையுலக பிரபலம் பகிர்ந்த பதிவு!
- IndiaGlitz, [Wednesday,October 19 2022]
இளம்பெண் ஒருவர் குழந்தையுடன் உபேர் கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்வது குறித்து திரையுலக பிரபலம் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான ஜேம்ஸ் வசந்தன் தனது பேஸ்புக் பக்கத்தில் யாரோ ஒருவர் தனது லிங்க்ட்-இன் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
எனக்காக உபர் காரை எனது நண்பர் முன்பதிவு செய்த நிலையில் அந்த கார் என்னை பிக்கப் செய்ய வந்தபோது, அந்த காரின் டிரைவர் ஒரு பெண் என்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அதன்பின் காரில் ஏறிய போது அவரது இருக்கையின் அருகில் ஒரு குழந்தை தூங்குவதை கவனித்தேன்
இதனை அடுத்து அந்த பெண்ணிடம் ’உங்கள் மகளா? என்று கேட்டபோது அவர் ’ஆம், என் மகள் தான். இப்போது விடுமுறையில் இருக்கிறார். அதனால் அதனால் நான் குழந்தையை அழைத்துக்கொண்டு செல்கிறேன்’ என்று கூறியிருந்தார்.
அதனை அடுத்து அந்தப் பெண்ணிடம் மேலும் நான் பேச்சு கொடுத்து தெரிந்து கொண்டபோது அவர் பெயர் நந்தினி என்றும் பெங்களூரில் உபர் நிறுவனத்தில் டிரைவராக பணி செய்கிறார் என்றும் தெரியவந்தது
மேலும் சில ஆண்டுகளுக்கு முன் அவர் தான் சேர்த்து வைத்த பணம் முழுவதையும் உணவு நிறுவனம் ஒன்றை தொடங்க முதலீடு செய்ததாகவும், அந்த சமயத்தில் திடீரென கொரோனா வைரஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அவர் முதலீடு செய்த அனைத்து பணமும் நஷ்டம் ஆகியது என்றும் அவர் தெரிவித்திருந்தார்
இதனை அடுத்து தற்போது தான் தினமும் 12 மணி நேரம் வேலை செய்வதாகவும் தனது கனவு ஒரு உணவு நிறுவனத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது தான் என்றும் அதற்காக பணம் சேர்த்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்
அந்த பெண்ணிடம் உங்களை ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா? என்று கேட்டபோது அவர் ’ஏன்’ என கேட்டார் அப்போது ’உங்களது ஊக்கமளிக்கும் முயற்சி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. தோல்விக்கு பிறகு மனமுடைந்து போகும் பலர் மத்தியில் நீங்கள் ஒரு போராளியாக இருப்பது என்னை மிகவும் கவர்ந்தது. நீங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்! உங்கள் கதையை மற்றவருடன் பகிர்ந்து கொண்டால் மற்றவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருக்கும்’ என்று கூறினேன். அதற்கு அவர் புகைப்படம் எடுக்க ஒப்புக் கொண்டார் என்று அந்த பதிவை ஜேம்ஸ்வசதன் முடித்துள்ளார்.
இந்த பதிவு வைரலாகி வருவதை அடுத்து உபேர் டிரைவர் நந்தினியை சிங்கப்பெண் என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.