விஜய் டிவி பிரபலத்திற்கு கோல்டன் விசா.. வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,January 09 2023]

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருந்து வரும் ஒருவருக்கு ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசா கிடைத்து உள்ளதை அடுத்து அது குறித்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

ஐக்கிய அரபு எமிரேட் தமிழ் திரையுலக பிரபலங்கள் உள்பட இந்திய திரை நட்சத்திரங்கள் பலருக்கும் கோல்டன் விசாக்களை அளித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த 20 ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய டிடி என்ற திவ்யதர்ஷினிக்கு கோல்டன் விசா அளித்துள்ளது.

இது குறித்த புகைப்படங்களை டிடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து தனக்கு கோல்டன் விசா கொடுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் டிடி நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் நடித்த ‘காபி வித் காதல்’ என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் அவர் தற்போது ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ’ஜோஸ்வா இமைபோல் காக்க’ உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.