ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா பெற்ற மற்றொரு தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Friday,February 04 2022]

கடந்த சில மாதங்களாக ஐக்கிய அரபு எமிரேட் நாடு கோல்டன் விசாவை இந்திய திரையுலக பிரபலங்களுக்கு வழங்கி வருகிறது என்பதும் அதில் சில தமிழ் திரையுலக பிரபலங்களும் பெற்று வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

தமிழ் திரையுலக நட்சத்திரங்களான த்ரிஷா, பார்த்திபன், பாடகி சித்ரா, நடிகை அமலா உள்பட ஒருசிலர் கோல்டன் விசாவை பெற்று உள்ள நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் கோல்டன் விசாவை பெற்று உள்ளார்.

இதுகுறித்து காஜல் அகர்வால் தனது சமூக வலைத்தளத்தில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசா பெறுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும், இந்த நாடு பல திரையுலக நட்சத்திரங்களை ஊக்குவித்து வரும் நிலையில் எனக்கும் அந்த வாய்ப்பை கொடுத்ததற்கு நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட் நாட்டின் கோல்டன் விசாவை பெற்றவர்கள் 10 ஆண்டுகள் அந்நாட்டின் குடிமகன்கள் போலவே கௌரவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.