நீர்வீழ்ச்சி அருகே பாறையில் உட்கார்ந்து செல்பி: இரு இளைஞர்கள் பரிதாப பலி
- IndiaGlitz, [Tuesday,January 28 2020]
செல்பி மோகத்தால் ஆபத்தான இடங்களில் செல்பி எடுத்து பலர் தங்கள் உயிரை இழந்து வருவதும் செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஊட்டியில் நீர்வீழ்ச்சி அருகே பாறை ஒன்றின் மீது உட்கார்ந்து இரண்டு இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தபோது திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி அருகே கல்லட்டி என்ற பகுதியை சேர்ந்த கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இரண்டு இளைஞர்கள் தங்கள் நண்பர்களுடன் ஊட்டியில் உள்ள நீர் வீழ்ச்சி ஒன்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது கணேசன் மற்றும் சாமுவேல் ஆகிய இருவரும் நீர்வீழ்ச்சி அருகே உள்ள ஒரு குளத்தில் சென்று அங்கு உள்ள ஒரு சின்ன பாறையில் உட்கார்ந்து செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கி மூழ்கினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படை குளத்தில் இறங்கி இருவருடைய பிணத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் பலர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும் செல்பி மோகத்தால் பலர் உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே வருகின்றது. இனிமேலாவது செல்பி எடுப்பவர்கள் ஆபத்தான இடங்களில் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.