பாம்பு டான்ஸ் ஆடிய இளைஞர்கள்: புதுவகை தண்டனை!
- IndiaGlitz, [Thursday,May 20 2021]
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவின்போது தேவையில்லாத காரணத்திற்காக வீட்டை விட்டு வெளியே வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இந்த எச்சரிக்கையையும் மீறி பலர் ஒரு அவசியமும் இன்றி வெளியே வந்து காவல்துறையினர்களிடம் சிக்கி தண்டனை பெற்று வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு விதியை மீறும் இளைஞர்களுக்கு காவல்துறையினர் புதுமையான தண்டனை அளித்து வருகின்றனர். திருக்குறள் வாசிப்பது உள்பட பல்வேறு தண்டனைகள் தமிழகத்தில் அரங்கேற்றப்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி எந்தவித காரணமும் இன்றி வீட்டை விட்டு வெளியே வந்த இரண்டு இளைஞர்களை அம்மாநில காவல்துறை பாம்பு டான்ஸ் ஆட வைத்து உள்ளனர். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்னராவது மற்ற இளைஞர்கள் தேவையில்லாத காரணத்திற்கு வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Watch: Sources said that the video is from Jhalawar district and police are reportedly punishing such youths for coming out of their houses without any reason.#Covid19 pic.twitter.com/Pq3gcKuG4R
— IANS Tweets (@ians_india) May 16, 2021