துப்பாக்கியுடன் பைக் ஸ்டண்ட் செய்யும் குறும்புக்கார யூத்ஸ்… அலற வைக்கும் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சில குறும்புக்கார இளைஞர்கள் ஓடும் பைக்கில் கையை விட்டுவிட்டு, பைக்கின்மேல் ஏறி நின்று பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுடுவது போன்ற சில புகைப்படங்களை தங்களது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு உள்ளனர். பார்ப்பதற்கு திகிலூட்டும் வகையில் அமைந்திருக்கும் இந்தப் புகைப்படம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரிகள் இல்லாமல் பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படித்து வருகின்றனர். இந்த நேரத்தைத் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக்கொண்ட சில குறும்புக்கார இளைஞர்கள் விலையுயர்ந்த பைக்குகளைக் கொண்டு வாகன நடமாட்டம் அதிகம் இருக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் பைக் சேஸிங் மற்றும் ஸ்டண்ட் போன்ற சாகசங்களில் அடிக்கடி ஈடுபடுவது வழக்கமாகவே உள்ளது. அதுவும் விஜயவாடாவில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகம் பதிவாகி வருகின்றன.
அந்த வகையில் தற்போது விஜயவாடா அடுத்த துர்க்கை அம்மன் கோவில் கனகதுர்கா மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் கையில் பொம்மை துப்பாக்கியுடன் வானத்தை நோக்கிச் சுடுவது போன்று அதுவும் ஓடும் பைக்கில் நின்றுகொண்டு இருக்கும் புகைப்படத்தை எடுத்து தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர்.
இதைப்பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலரும் அதிர்ச்சியடைந்து உரிய இளைஞர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இளைஞர்கள் பைக்குகளின் நெம்பர் பிளேட்டுகளை மாற்றிவிட்டு இப்படியான நூதன வேலையில் ஈடுபட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com