ஊரடங்கு உத்தரவை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை: மத்திய அரசு அதிரடி உத்தரவு 

கொரோனா வைரஸ் இந்தியாவில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அப்போது தான் கொரோனா வைரஸிலிருந்து மக்கள் தப்பிக்க முடியும் என்றும் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். இருப்பினும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காற்றில் பறக்கவிடப்பட்டு சமூக விலகலை கூட கடைப்பிடிக்காமல் பலர் வெளியே வந்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது

ஊரடங்கு உத்தரவை ஒருசிலர் சரியான வகையில் பின்பற்றவில்லை என்றாலும் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஆபத்து என்பதை அறிந்த மத்திய அரசு தற்போது ஊரடங்கு உத்தரவை மீறினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். எனவே நாளை முதல் ஊரடங்கு உத்தரவு கடுமையாக பின்பற்றப்படும் என்றும் ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாத காரணத்திற்காக வெளியே வருபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது