தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்த 2 வயது குழந்தை… பரிதாபச் சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சங்கரன்கோவில் பகுதியில் விளையாடி கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை ஒன்று தவறுதலாக தண்ணீர் பக்கெட்டில் கவிழ்ந்து உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை தவறுதலாக தண்ணீர் பக்கெட்டில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
தென் காசி மாவட்டம் சங்கரன் கோவில் பகுதியில் வசித்து வரும் ஜெபாஸ்டியன்- எஸ்தர் தம்பதி இருவருமே தினமும் வேலைக்குச் செல்கின்றனர். இவர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் குழந்தையை பக்கத்து வீட்டு உறவினர்களிடம் விட்டு செல்லுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல பக்கத்து வீட்டில் குழந்தையை விட்டுவிட்டு இத்தம்பதி வேலைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் நேற்று மாலை மற்ற குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்த ஆரோன் எனும் இரண்டரை வயது குழந்தை வீட்டிற்கு முன்பே வைத்திருந்த தண்ணீர் பக்கெட்டை எட்டிப் பார்த்து இருக்கிறது. இப்படி தலையை மட்டும் உள்ளே விட்டு பார்த்துக் கொண்டு இருந்த குழந்தை ஆரோன் திடீரென தவறுதலாக மல்லாந்து அந்த பக்கெட்டிலேயே விழுந்து இருக்கிறது. இதை பெரியவர்கள் யாரும் கவனிக்காத நிலையில் உடன் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் அக்குழந்தையை தேடி உள்ளனர்.
அப்போது பக்கெட்டில் ஆரோன் விழுந்து கிடந்ததைப் பார்த்து பதறிய சிறுவர்கள் அருகில் உள்ள பெரியவர்களை அழைத்து உள்ளனர். அவர்கள் குழந்தையை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தை ஏற்கனவே மூச்சுத் திணறி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com