கொரோனா வைரஸ் எதிரொலி: குழந்தைகளை மாற்றி கொண்ட தாய்மார்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது யாருக்கு வரும் என்று தெரியாத நிலையில் மர்மமாக உள்ளது. கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் இருந்தாலும் பிறக்கும் குழந்தை வைரஸ் தாக்குதல் இல்லாமல் பிறக்கும் நிகழ்வுகளும், கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் இல்லாமல் இருந்தாலும் பிறக்கும் குழந்தைக்கு மட்டும் கொரோனா வைரஸ் இருக்கும் அதிசய சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளை மாற்றி மாற்றி கவனித்துக்கொள்ளும் ஆச்சரியமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தில் 27 வயது பெண் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. ஆனால் அவரது 2 வயது குழந்தைக்கு பாசிட்டிவ் சென்று ரிசல்ட் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் இன்னொரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்தபோது அவருக்கு கொரோனா உறுதியானது. ஆனால் அவரது ஆறு வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் இல்லை.
இதனை அடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்னொரு பெண்ணின் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தையை தான் கவனித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அதேபோல்தான் வைரசால் பாதிக்கப்படாத பெண், கொரோனாவால் பாதிக்கப்படாத குழந்தையை கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார். எனவே இருவரும் தங்கள் குழந்தைகளை மாற்றி மாற்றி கவனித்து வருகின்றனர். நிலைமை சரியானதும் இருவரும் அவரவர் குழந்தையை பெற்று கொள்வதாக உறுதியளித்துள்ளனர். கொரோனா வைரஸால் பல்வேறு அபாயங்கள் வந்தாலும் இதுவரை வெளிவராத மனிதநேயப் பண்புகள் வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இந்த வைரஸ் கொடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout