கொரோனா வைரஸ் எதிரொலி: குழந்தைகளை மாற்றி கொண்ட தாய்மார்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது யாருக்கு வரும் என்று தெரியாத நிலையில் மர்மமாக உள்ளது. கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் இருந்தாலும் பிறக்கும் குழந்தை வைரஸ் தாக்குதல் இல்லாமல் பிறக்கும் நிகழ்வுகளும், கர்ப்பிணிக்கு கொரோனா வைரஸ் இல்லாமல் இருந்தாலும் பிறக்கும் குழந்தைக்கு மட்டும் கொரோனா வைரஸ் இருக்கும் அதிசய சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றன.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இரண்டு பெண்கள் தங்கள் குழந்தைகளை மாற்றி மாற்றி கவனித்துக்கொள்ளும் ஆச்சரியமான தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் 27 வயது பெண் ஒருவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. ஆனால் அவரது 2 வயது குழந்தைக்கு பாசிட்டிவ் சென்று ரிசல்ட் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் இன்னொரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் சோதனை செய்தபோது அவருக்கு கொரோனா உறுதியானது. ஆனால் அவரது ஆறு வயது குழந்தைக்கு கொரோனா வைரஸ் இல்லை.

இதனை அடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்னொரு பெண்ணின் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட குழந்தையை தான் கவனித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அதேபோல்தான் வைரசால் பாதிக்கப்படாத பெண், கொரோனாவால் பாதிக்கப்படாத குழந்தையை கவனித்துக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார். எனவே இருவரும் தங்கள் குழந்தைகளை மாற்றி மாற்றி கவனித்து வருகின்றனர். நிலைமை சரியானதும் இருவரும் அவரவர் குழந்தையை பெற்று கொள்வதாக உறுதியளித்துள்ளனர். கொரோனா வைரஸால் பல்வேறு அபாயங்கள் வந்தாலும் இதுவரை வெளிவராத மனிதநேயப் பண்புகள் வெளிப்படுத்தும் வாய்ப்பையும் இந்த வைரஸ் கொடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வக்கீலாக மாறிய சூர்யா-ஜோதிகா பட குழந்தை நட்சத்திரம்

சூர்யா, ஜோதிகா இணைந்து நடித்த திரைப்படங்களில் ஒன்று 'சில்லுனு ஒரு காதல்'. கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஒரு மிகச்சிறந்த ரொமான்ஸ் படமாக ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இதெல்லாம் ஒன்னுமே இல்லங்க... இந்தியா நவம்பரில்தான் கொரோனா உச்சத்தைப் பார்க்கும்  -ICMR தகவல்!!!

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை அடுத்து தய்போது இந்தியா அதிக கொரோனா பாதிப்பை சந்தித்து வருகிறது.

ஊரடங்கு நேரத்தில் நடந்த கேரள முதல்வரின் மகள் திருமணம்: பிரபலங்கல் வாழ்த்து

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களின் மூத்த மகள் வீணா என்பவரின் திருமணம் மிக எளிமையாக முதல்வர் இல்லத்தில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக

இந்தியா: கொரோனா விஷயத்தில் ஒரே ஆறுதுல் இதுதாங்க... மத்திய அரசு விளக்கம்!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதைத் தொடர்ந்து மக்கள் பதட்ட மனநிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் என்ன செய்வேன்??? அதிபர் ட்ரம்ப்பின் தெறிக்கவிடும் பதில்!!!

உலகையே கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது