ஒருபாலின திருமணம் செய்து கொண்ட கிரிக்கெட் வீராங்கனைகள்: ரசிகர்கள் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வீராங்கனைகள் இருவர் காதலித்து ஒருபாலின திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நியூசிலாந்தில் ஒருபாலின திருமண மசோதா கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு பின்னர் பெரும்பான்மையான எம்பிக்களின் ஆதரவால் சட்டமாக்கப்பட்டது. அதன்பின் இந்த ஆறு ஆண்டுகளில் ஒருசில ஒருபாலின திருமணங்கள் நியூசிலாந்தில் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பெண்கள் கிரிக்கெட் பிக் பேஷ் லீக் தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆஸ்திரேலியாவின் நிக்கோலா ஹான்காக் மற்றும் நியூசிலாந்தின் ஹேலி ஜேன்சென் ஆகியோர் விளையாடினார். ஒரே அணியில் இருவரும் விளையாடியபோது நெருங்கி பழகினர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இவர்களது திருமணம் கடந்த வாரம் முறைப்படி நடந்தது. இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் இந்த ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments